fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆயிரத்து 689 கிலோ பீடி இலைகள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 15:33

ஆயிரத்து 689 கிலோ பீடி இலைகள் மீட்பு

மன்னார் ஒழுதுடுவாய் பகுதியில் ஆயிரத்து 689 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினர் அவற்றை கண்டெடுத்துள்ளனர். கரையோரத்தில் மிதந்து கொண்டிருந்த 14 பொதிகளில் பீடி இலைகள் பொதியிடப்பட்டிருந்ததாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் மேற்கொண்ட தேடுதலின் போது மேலும் 33 பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட பொதிகள் யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாத காலத்தில் மாத்திரம் 18 ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 15:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க