தமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வது சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பொறுப்பாகும் : ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 15:22

தமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வது சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பொறுப்பாகும் : ஜனாதிபதி

மாவட்டங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியது அனைத்து அமைச்சர்களதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாவட்ட மக்களுக்கு அநீதி இழைக்காது, தமக்காக ஒதுக்கப்படும் நிதியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது அமைச்சர்களின் கடமையாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பிரதேச அரசியல் தலைவர்கள், துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து கிராமிய மக்களின் பிரச்சினைகளை கண்டறிவது அவசியமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பிரதேச செயலாளர்களும், உள்ளுராட்சி மன்ற தலைவர்களும் தமக்குரிய கடமை காலத்தில் உயரிய பணியை செய்ய வேண்டும். பிரதேச செயலாளர்கள் இடமாற்றம் பெற்றுச்சென்றாலும் தன்னால் இவ்வாறான பணிகளை செய்ய முடிந்ததென திருப்தி கொள்ளுமளவுக்கு சேவை செய்யவேண்டும்.

அரசியல் தலைவர்களுக்கும் இது பொருந்துமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மீளாய்வு குழுக்கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை பொலன்னறுவை நகர வீதி அபிவிருத்தி செயற்திட்;டம் காரணமாக காணிகளை இழந்த 150 பேருக்கு நட்டயீடும் வழங்கி வைக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 15:22

Default