fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜீ 20 மாநாடு ஜப்பானில் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:30

ஜீ 20 மாநாடு ஜப்பானில் ஆரம்பம்

ஜீ 20 மாநாடு இன்று ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமாகிறது. நாடுகளுக்கிடையிலான வர்த்தக சமர், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளன. இதேவேளை, ஜீ 20 மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னரே பல நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. சீன ஜனாதிபதி ஷி சின்பிங்கும், ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபேயும் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிப்பது தொடர்பாகவும், சர்வதேச தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்குவது தொடர்பாகவும் இருதலைவர்களும் ஆராய்ந்துள்ளனர்.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க