பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:25

பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது சாட்சியாளராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதுர்தீன் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளார்.

ரிஷாத் பதுர்தீன் கடந்த 26ம் திகதி சாட்சியம் வழங்குவதற்காக தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜரான போதிலும் அவரிடம் விசாரணை நடத்தாமல் ஒத்தி வைப்பதாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்கமைய இன்றைய தினம் 02 மணிக்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:25

Default