தெற்காசியாவின் சிறந்த விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை காணப்படுவதாக பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்றும் வழமைபோல் காலை 10.30கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகின. நேற்றைய தினம் இடம்பெற்ற அவசரகால சட்டத்தை ஒருமாதத்தினால் நீடிக்கும் விவாதமானது பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பாக பதில் அளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் பெரும்பான்மையினர் இன்றி நடத்துவதற்கு கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்தார். போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சின் விவாதம் அடுத்தாக இடம்பெற்றது. பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இச்சட்ட மூலத்தின்; மூலம் விமான நிலையங்களை வகைப்படுத்துவதற்கு எதிர்;பார்க்கப்படுவதாக தெரிவித்தார். பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக நவீனமயப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.