வடக்கு கிழக்கில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 27, 2019 15:18

வடக்கு கிழக்கில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

தன்னார்வ அடிப்படையில் வடக்கு கிழக்கில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறுகிறது. ஆயிரத்து 119 பேருக்கு இவ்வாறு நியமனம் வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நிகழ்வு இடம்பெறுமென கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 27, 2019 15:18

Default