பாடசாலை பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கண்டறிய விசேட குழு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2019 12:04

பாடசாலை பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கண்டறிய விசேட குழு

நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் பாடசாலை பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கண்டறிய கல்வியமைச்சு விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

கடந்த 1980ம் ஆண்டு முதல் கல்வியமைச்சு வழங்கும் பாடசாலை இஸ்லாம் பாடப்புத்தகங்களில் இஸ்லாம் மதத்தில் கூறப்படாத பல விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் அவையே சஹ்ரான் போன்றோர் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்ததாக தெரிவுக்குழுவில் தன்னிச்சையாக முன்வந்து சாட்சியமளித்த ரிஸ்வின் இஸ்மத் என்பவர் தெரிவித்திருந்த நிலையில் அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2019 12:04

Default