fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த மாணவர்களுக்கு மூச்சு திணறல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2019 12:00

மலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த மாணவர்களுக்கு மூச்சு திணறல்

மலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 15 பாடசாலைகளிலுள்ள சுமார் 75 மாணவர்களே அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். சம்பவம் மலேசியாவின் பசிர் குடங்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து 400 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை காற்றுடன் கலந்தமையினால் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் நச்சுக்காற்றை சுவாசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மலேசிய பாதுகாப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2019 12:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க