fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வறட்சியான வானிலை : நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2019 18:26

வறட்சியான வானிலை :  நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

சிறுபோகத்திற்கான நீரின் தேவை அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வறட்சியான வானிலை தொடருமானால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் குறைவடையும் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 13 வீதமாகவும் மட்டக்களப்பிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 15 வீதமாகவும் மொனராகலை மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 17 வீதமாகவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 3 மாதங்களில் சாதாரண அளவைக் காட்டிலும் குறைந்த மழைவீழ்ச்சி பதிவாகியமையே குறித்த நிலைக்கு காரணமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2019 18:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க