வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2019 18:15

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுள் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் து.று. தென்னகோன் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில், கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள 150 கைதிகளும் அடுத்த மாதத்தில் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துவரப்படுவார்கள் என சிறைச்சாலை பணிப்பாளர் நாயகம் து.று. தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2019 18:15

Default