fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

11 வயது சிறுமியின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய மோடி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2019 15:53

11 வயது சிறுமியின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய  மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 11 வயது சிறுமியொருவரின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். குறித்த சிறுமி அனுப்பிய கடிதத்திற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். பொதுத்தேர்தில் வெற்றிபெற்ற பிரதமர் மோதிக்கு வாழ்த்து தெரிவித்து அச்சிறுமி இக்கடிதத்தை அனுப்பியிருந்தார். இதில் மேலும் சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

நாட்டில் சுத்தமான சுற்றாடலை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு குறித்த 11 வயது சிறுமி தனது கடிதத்தினூடாக பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தான் வசிக்கின்ற ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் பாரிய சுற்றாடல் மாச காணப்படுவதாக குறித்த சிறுமி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்தே பிரதமரும் பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரதமரது பதில் கடிதம் கிடைத்துள்ளதால தனது பிள்ளை மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளதாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2019 15:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க