கொழும்பின் சில பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2019 12:44

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு

கொழும்பை அண்மித்த சில பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்;படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 9 மணிமுதல் நாளை மறுதினம் காலை 9 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம, பாதுக்க மற்றும் மீபே ஆகிய பகுதிகளில் இந்நீர்வெட்டு அமுலாகும். அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2019 12:44

Default