போதை பொருள் ஒழிப்பு வாரத்தையொட்டி அரசாங்க அதிகாரிகள் உறுதிமொழி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 15:11

போதை பொருள் ஒழிப்பு வாரத்தையொட்டி அரசாங்க அதிகாரிகள் உறுதிமொழி

போதை பொருள் ஒழிப்பு வாரத்தையொட்டி அரசாங்க அதிகாரிகள் எந்தவித போதை பொருளையும் பாவிப்பதில்லையென உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். நேற்று ஆரம்பமான போதை பொருள் ஒழிப்பு வாரம் ஜூலை முதலாம் திகதி வரை அமுலில் இருக்கும்.

போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத போக்குவரத்துக்கு எதிரான சர்வதேச தினம் நாளை மறுதினமாகும். இதனை அடிப்படையாக வைத்தே போதை பொருள் ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் போதை பொருள் ஒழிப்பு செயல்த்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் ஆலோசனையில் போதை பொருள் வாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் தடுப்பு செயல்த்திட்டத்தின் கீழ் விதிமுறைகளை வகுத்தல், அதனை அமுல்படுத்தல, சிகிச்சையளித்தல், புனர்வாழ்வு வழங்குதல் ஆகிய செயல்த்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது இவ்வாறு இருக்க தாங்களும் தங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் போதை பொருள்களை பயன்படுத்துவதில்லையென அரசாங்க அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அம்பாறை மாவட்ட செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. தேசிய போதை பொருள் தடுப்பு வாரத்தின் பிரதான நிகழ்வு எதிர்வரும் முதலாம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 15:11

Default