முத்துராஜவெல உராய்வு எண்ணெய் உற்பத்திக்கான புதிய தொழிற்சாலை பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 14:57

முத்துராஜவெல உராய்வு எண்ணெய் உற்பத்திக்கான புதிய தொழிற்சாலை பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்

முத்துராஜவெல உராய்வு எண்ணெய் உற்பத்திக்கான புதிய தொழிற்சாலை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. இத்தொழிற்சாலை திறக்கப்பட்டதன் மூலம் இலங்கை மக்கள் அடையும் நன்மைகள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி இவ்வாறு விளக்கமளித்தார்.

“இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனம் மலேசிய கம்பனியுடன் இணைந்து, உராய்வு எண்ணெயை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும். இதன் மூலம் தரமான உராய்வு எண்ணெயை வாடிக்கையாளர்கள் வாகனங்களுக்கு பயன்படுத்த முடியும். உலகின் மிக பிரபலமான உராய்வு எண்ணெய் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால் இலங்கைக்கு பெரும் நன்மைகள் கிடைக்கும். இவ் எண்ணெயை பயன்படுத்துவதால் வாடிக்கையாளர்கள் தமது வாகனங்களின் ஆயுட்காலத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். 20 பில்லியன் அமெரிக்க டொலர் இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படுவதுடன் புதிய உராய்வு எண்ணெய் ஒன்று இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும்.”

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 14:57

Default