இரவு கடுகதி ரயிலில் மோதுண்டு யானை பலி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 14:39

இரவு கடுகதி ரயிலில் மோதுண்டு யானை பலி

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இரவு கடுகதி ரயிலில் மோதி தாய் யானையொன்று இறந்துள்ளதுடன் அதன் குட்டி படுகாயமடைந்துள்ளது.ரயில்வீதியை கடக்க முயன்ற போதே குறித்த யானைகள் இரண்டும் ரயிலில் மோதுண்டுள்ளன.

மரணமடைந்த தாய் யானையின் வயது 15 என்பதுடன் காயமடைந்த குட்டியின் வயது ஒன்றரை வருடங்களாகுமென வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த குட்டி யானைக்கு கிரித்தலை வனஜீவராசிகள் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இற்றைக்கு சில மாதங்களுக்குமுன்னரும் இப்பகுதியில் யானையொன்று ரயிலில் மோதுண்டு மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 14:39

Default