பயனாளிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்காகவே சமுர்தி நிவாரணம் வழங்கப்படுவதாக அமைச்சர் தலதா தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 14:42

பயனாளிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்காகவே சமுர்தி நிவாரணம் வழங்கப்படுவதாக அமைச்சர் தலதா தெரிவிப்பு

சமுர்தி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் சமுர்தி நிவாரணத்தை வழங்குவதாகவும் வாக்குகளை எதிர்ப்பார்த்து அதனை வழங்கவில்லையெனவும் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். இவ்வரசாங்கம் ஆட்சியில் இருக்கம் வரை நாட்டின் ஒரு அங்குலம் நிலமேனும்; வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரத்தினபுரி இம்புல்பே பிரதேச செயலக பிரிவில் புதிய சமுர்தி பயனாளிகளுக்கு சமுர்தி அட்டைகள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் தலதா அதுகோரள இவ்வாறு தெரிவித்தார். 6 இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்தி நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் இவ்வாறு சமு:ர்தி அட்டைகள் வழங்கப்பட்டன. இப்பிரதேச அரசியல்வாதிகள் பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 14:42

Default