fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் மனு ஜூலை 31 இல் விசாரணைக்கு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 14:39

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் மனு ஜூலை 31 இல் விசாரணைக்கு

தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை இரத்துச் செய்யும் வகையில் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்க கோரி பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி இடம்பெறுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குறித்த மனு தொடர்பில் சட்டரீதியிலான விடயங்கள் விரிவாகவும் தர்க்க ரீதியாகவும் ஆராயப்பட வேண்டுமென்பதால் அதன் மீதான விசாரணையை அடுத்த மாதம் 31 ஆம் திகதி நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இம்மனுவிற்கு எதிராக ஜனாதிபதி செயலாளர் சத்தியக்கடதாசி மூலம் ஆட்சேபனையை தாக்கல் செய்ததாக அவரது சட்டத்தரணி மேலதிக சொலிசிட்ட ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் தன்னை கலந்;து கொள்வதற்கான அழைப்பு எதுவும் அனுப்பபபடவில்லையென பொலிஸ்மா அதிபர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியதன் மூலம் அரசியல் யாப்பில் குறிப்பிடப்படடுள்ள சமமாக மதிக்கும் அடிப்படை உரிமை மீறல் இடம்பெற்று இருப்பதாக பொலிஸ்மா அதிபர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 14:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க