fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதை பொருள் ஒழிப்பு வாரம் நாளை மறுநாள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2019 14:53

போதை பொருள் ஒழிப்பு வாரம் நாளை மறுநாள் ஆரம்பம்

போதை பொருள் ஒழிப்பு வாரம் நாளை மறுநாள் ஆரம்பமாகி ஜூலை முதலாம் திகதி வரை அமுல்படுத்தப்படும்.எதிர்வரும் 26ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள போதை பொருள் பாவனை மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிரான சர்வதேச தினத்தை அடிபபடையாக கொண்டே போதை பொருள் ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள போதை பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் ஆலோசனைககு அமைய இது ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

போதை பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள, கொள்;ளை சட்டவாக்கம் மற்றும் அமுல்படுத்தல், நிவாரணமும் சிகிச்சையும், புனர்வாழ்வு என்பனவற்றை தொனிப்பொருளாக கொண்டு, தற்போது பல்வேறு நிகழ்ச்சிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்துவதே போதை பொருள் ஒழிப்பு வாரத்தின் மற்றொரு நோக்கமாகும். இதன் பிரதான நிகழ்வு, எதிர்வரும் முதலாம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2019 14:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க