சுவசெரிய திட்டத்திற்கு 11 இலட்சம் அழைப்புக்கள் : கிழக்கிற்கும் சேவை விஸ்தரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2019 14:47

சுவசெரிய திட்டத்திற்கு 11 இலட்சம் அழைப்புக்கள் : கிழக்கிற்கும் சேவை விஸ்தரிப்பு

1990 சுவசெரிய எம்பியூலன்ஸ் சேவைக்கு இதுவரை 11 இலசட்த்துக்கும் கூடுதலான அழைப்புக்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 2 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் கூடுதலானோருக்கு இதன்மூலம் சேவை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் மற்றுமொரு கட்டம் அம்பாரை நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் திங்கள் கிழமை அமுல்படுத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான எம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன. 1990 சுவசெரிய எம்பியூலன்ஸ் சேவையின் இறுதி கட்டம் கிழக்கு மாகாணத்தை கேந்திரமாக கொண்டு இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ளது. அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் வேண்டுகோளுக்கு அமைய இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாக 27 எம்பியூலன்ஸ் வண்டிகள் இதன்போது கையளிக்கப்படவுள்ளன. 1990 சுவசெரிய எம்பியூலன்ஸ் சேவையில் இதுவரை 297 எம்பியூலன்ஸ் வண்டிகள் காணப்படுகின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2019 14:47

Default