fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக கிண்ண கிரிக்கட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2019 10:31

உலக கிண்ண கிரிக்கட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை

அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 26வது லீக் போட்டி நேற்று நொட்டிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணியை 48 ஓட்டங்களினால் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் ஆரோன் பின்ச் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதன் அடிப்படையில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டை இழந்து 381 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக வோர்னர் 166 ஓட்டங்களையும் ஆரோன் பின்ச் 53 ஓட்டங்களையும் கவாஜா 89 ஓட்டங்களைம் பெற்றனர். பின்னர் 382 ஓட்டங்களை பெற்றால்;வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும், சவுமியா சர்காரும் விளையாடினர். சவுமியா சர்கார் 10 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஷகிப் அல் ஹசன் 41 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, முஷ்பிகர் ரஹிம் தமிம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்தார். தமிம் இக்பால் அரை சதம் கடந்து 62 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தாஸ் 20 ஓட்டங்களிலும் மக்முதுல்லா 69 ஓட்டங்களிலும் விக்கட்டை பறிகொடுத்தனர். இறுதியில் பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 333 ஓட்டங்களை மாத்திரமே பெற்று அவுஸ்திரேலிய அணியிடம் 48 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.
இதேவேளை உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் 27வது லீக் போட்டியில் இன்று ஹெடிங்லேவில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்கவுள்ளன. இலங்கை இரசிகர்களும் இப்போட்டியை மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2019 10:31

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க