அமைச்சுக்களின் செலவீனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையும் இல்லை : நிதியமைச்சு அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2019 20:43

அமைச்சுக்களின் செலவீனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையும் இல்லை : நிதியமைச்சு அறிவிப்பு

அமைச்சுக்களின் செலவீனங்கள் 15 சதவீதத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென நிதியமைச்சு அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் வருமானம் குறைந்தும் செலவினங்கள் அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தடுக்கும் வகையில் அண்மையில் கூடிய அமைச்சரவை எடுத்த புதிய தீர்மானமாக தெரிவித்து அச் செய்தி வெளியிடப்படடுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அரச துறையின் மூலதன செலவினத்தை 10 முதல் 15 சதவீத வரையிலான அளவில் சேமித்து வைப்பதற்கான யோசனையொன்று 2019 வரவு செலவு திட்டத்தின் மூலம் நிதியமைச்சு முன்வைத்திருந்தது. வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது முதல் இவ் யோசனையை அமுல்படுத்துவது தொடர்பாக சகல அமைச்சுக்களும் செயல்பட்டு வருகின்றது. இதனை தவிர வேறெந்த காரணங்களையும் கொண்டு புதிய தீர்மனம் எதுவும் எட்டப்படவில்லையென நிதியமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை இவ்வருடத்தின் முதல் காலாண்டிற்குள் பொருளதார வளர்ச்சியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுசன மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவை 3.7 சதவீத அதிகரிப்பாகும். விசேடமாக விவசாயதுறையில் சிறந்த நிலை காணப்பட்டமையே இவ்வளர்ச்சிக்கு காரணம் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2019 20:43

Default