இயக்குனர் விஜய் இயக்கிய வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் சாய்ஷா. அதனை தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர் விஜய்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த சாய்ஷா ‘உலகத்திலேயே சிறந்த சகோதரர் நீங்கள் தான். எனக்கு ஒரு சகோதரர் இருந்ததிருந்தால் கூட அவர் உங்கள் அளவிற்கு இருந்திருக்க மாட்டார். இவ்வருடம் மகிழ்ச்சியும், வெற்றியும், அன்பும் நிறைய கிடைக்கட்டும்’ என சாய்ஷா இயக்குனர் விஜய்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.