உயிர்த்தஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் கூடவுள்ளது. அகில இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பு ஆகியவற்றிற்கு இன்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று மாலை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடி சில தீர்மானங்களை மேற்கொண்டிருந்தது. எனினும் ஊடகங்களுக்கு இந்த சந்திப்பின்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.