சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வடகொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார். அவர் இன்றைய தினம் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
2005ம் ஆண்டுக்கு பின்னர் சீன ஜனாதிபதியொருவர் வடகொரியாவிற்கு பயணித்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். வடகொரிய தலைவர் சீன ஜனாதிபதியை நான்கு தடவைகள் சீனாவில் வைத்து சந்தித்துள்ளார். இந்நிலையில் இரு நாட்டு தலைவர்களினதும் சந்திப்பின் போது வடகொரியாவின் அணுசக்தி திட்டம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.