fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக கிண்ண கிரிக்கட் தொடர் : தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 19, 2019 12:41

உலக கிண்ண கிரிக்கட் தொடர் :  தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகள்  இன்று மோதல்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 25வது லீக் போட்டி இன்று பேர்மிங்ஹேமில் நடைபெறவுள்ளது. போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி மூன்றில் வெற்றிபெற்றுள்ளதோடு ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதற்கமைய 7 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திலுள்ளது. தென்னாபிரிக்க அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த தென்னாபிரிக்கா, ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையிலும் 3 புள்ளிகளோடு 8ம் இடத்திலுள்ளது. ஏறகனவே அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு தென்னாபிரிக்காவுக்கு கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் தென்னாபிரிக்கா முற்றாக அரையிறுதிக்கன வாய்ப்பை இழக்கும். இதனிடையே நேற்று நடைபெற்ற 24வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை 150 ஓட்டங்களால் வீழ்த்தியது. அணித்தலைவர் இயன் மோகனின் 148 ஓட்ட உதவியுடன் இங்கிலாந்து ஆப்கானிஸ்தானுக்கு 398 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. எனினும் ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 19, 2019 12:41

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க