fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினால் 184 பேர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2019 18:33

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினால் 184 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தின் கயா பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் வெப்பநிலை 45 பாகை செல்சியசை தாண்டியுள்ளதாக இந்திய வளிமண்டலவியல் பிரிவு தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலையினால் 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். திறந்தவெளியில் மக்கள் நடமாட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை தொழிலாளர்கள் திறந்தவெளிகளில் பணிப்புரிய வேண்டாம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ராஜஸ்தான், டில்லி, உத்தர பிரதேஷ், மத்திய பிரதேஷ் உள்ளிட்ட பல மாநிலங்களில் 46 பாகை செல்சியசிலும் கூடுதலான வெப்பநிலை நிலவுகின்றது. பீகார் மாநிலத்தில் சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 22ம் திகதி வரை மூடப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் பரவி வரும் வைரஸ் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட சிறார்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2019 18:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க