வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டிருப்புவ லுணுவில பகுதியில் வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வீட்டின் சமையலறைக்குள்ளிருந்து 58 வயதான பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று இரவு 7.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண் அதே வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
படிக்க 0 நிமிடங்கள்