தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு மீண்டும் விளக்கமறியல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2019 13:06

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு மீண்டும் விளக்கமறியல்

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மொஹமட் பாருக் மொஹமட் பவாஸ் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அடிப்படைவாத குழுவின் உறுப்பினராக செயற்பட்டு அடிப்படைவாதத்தை பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2019 13:06

Default