தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2019 18:37

தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளையும் பேராயார் பார்வையிட்டார்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தும், காயமடைவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் பேராயர் தலைமையில் விசேட வழிபாடொன்று இடம்பெற்றது. நாட்டில் நிலையான சமாதானம் மற்றும் புரிந்துணர்வு ஏற்படுவதற்கு விசேட பிரார்த்தனைகளும் இதன்போது இடம்பெற்றன.

தாக்குதலுக்கு இலக்கானவர்களின் உறவினர்களுடன் பேராயர் சுமூக கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தார். இதேவேளை பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, மட்;டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோஷப் ஆண்டகையுடனும் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2019 18:37

Default