fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2019 02:08

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள்  இன்று மோதல்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 20வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் மோதவுள்ளன. இலங்கை விளையாடவிருந்த கடந்த இரண்டு போட்டிகளும் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தன. இந்நிலையில் இலங்கை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதியாக விளையாடி 11 நாட்களின் பின்னர் இன்று களமிறங்கவுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தே அணி தெரிவுசெய்யப்படுமென அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார். லண்டன் ஓவல் ஆடுகளம் ஏனைய ஆடுகளங்களை விட வித்தியாசமானது. இதனால் வியூகங்களை அமைத்து களமிறங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார். போட்டி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை தொடரின் 21வது போட்டி இன்று பிற்பகல் 6 மணிக்கு கார்டிப்பில் ஆரம்பமாகவுள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2019 02:08

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க