பிரதமரின் பொசொன் நோன்மதி தின செய்தி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2019 15:02

பிரதமரின் பொசொன் நோன்மதி தின செய்தி

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு:

ஒரு நாட்டினையும், நாட்டு மக்களையும் வந்தடையும் ஒரு தர்ம வழிமுறை அந்த மக்கள் சமூகத்தைப் புதுப்பித்து, சமூக, கலாசார, அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முற்போக்கான மாற்றமொன்றை ஏற்படுத்தியமை தொடர்பாக உலக வரலாற்றில் காணப்படும் சிறந்த முன்னுதாரணமாக புத்த மதம் இலங்கையில் நிலைபெற்றமை ஊடாக ஏற்பட்ட சமூக மறுமலர்ச்சியைக் குறிப்பிட்டுக் கூற முடியும். உண்மையான தர்ம போதனையொன்று மக்கள் சமூகத்தில் நிலைபெறுவதற்கு ஆக்கிரமிப்புக்கள், வன்முறைகள் தேவையற்றது என்பது புத்த மதம் இலங்கையில் நிலைபெற்ற முறை மூலம் மிகவும் தெளிவாகிறது. புத்த பெருமான் காட்டித் தந்த தர்ம வழிமுறையை விளங்கிக் கொள்ளக் கூடிய மக்கள் சமூகமொன்று இங்கு காணப்படுகின்றது என்பதைத் தெளிவாக உணர்ந்த நிலையிலேயே மகிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்தார். இந்த உயரிய பொசொன் போயா தினத்தில் குறித்த உண்மையான தர்மத்தின் ஆழமான உயர்ந்த பெறுமானங்கள் தொடர்பாக நாம் மிகவும் கவனஞ் செலுத்த வேண்டும். தீவிரவாத சக்திகள் செயற்படுகின்ற இவ்வாறான காலப்பகுதியில் நாம் மென்மேலும் சிறப்பாக தர்மத்தைப் பின்பற்றி, மனிதாபிமானத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைய வேண்டும். வெளிப்புறச் சடங்குகள் மூலமன்றி தர்மத்தின் உண்மையான மையக் கருத்தினைக் கொண்டு எமது வாழ்வினை வளப்படுத்திக் கொள்வோம். சிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து நல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தினால் நிரம்ப வேண்டும் என இந்த உயரிய பொசொன் தினத்தில் பிரார்த்திக்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க

பிரதம அமைச்சர்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2019 15:02

Default