சம்மாந்துறை கந்தசாமி கோவில் வீதியில் நபரொருவரை கொலைசெய்த சந்தேகநபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மற்றுமொரு நபர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் பெண்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.