தஜிகிஸ்தான் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் ஆசிய கலந்துரையாடல்கள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் உரையாற்றவுள்ளார். மாநாடு டுஷான் பே நகரில் நடைபெறுகிறது.
மாநாட்டில் இன்றையதினம் தினம் அரச தலைவர்களின் அமர்வு இடம்பெறவுள்ளது. அதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, தென்கொரியா, ஈரான், ஈராக், கசகஸ்தான், தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீர் இராச்சியத்தின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளார். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம் தஜிகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.