இந்திய – பாகிஸ்தான் பிரதமர்கள் திடீர் சந்திப்பு
Related Articles
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்துள்ளனர். இருவரும் முன்னேற்பாடின்றி சந்தித்ததாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் பிஸ்கேக் நகரில் இடம்பெறும் ஷென்காய் இணக்கப்பாட்டு அமைப்பின் மாநாட்டின் போதே இருநாட்டு தலைவர்களும் சந்தித்துள்ளனர்.
இந்திய – பாகிஸ்தான் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையை சிறந்த தீர்வு என இருநாட்டு தலைவர்களும் ஏற்றுக்கொண்டதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்திய – பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டது. குறித்த சம்பவத்தையடுத்து இருநாட்டு தலைவர்களும் சந்தித்த முதற் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.