இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு செயல் திட்டங்களுக்கு பூரண உதவி : சிங்கப்பூர் அரசு பிரதமரிடம் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2019 18:33

இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு செயல் திட்டங்களுக்கு பூரண உதவி : சிங்கப்பூர் அரசு பிரதமரிடம் தெரிவிப்பு

உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கையினால் வழங்கப்படும் பங்களிப்பு தொடர்பில் சிங்கப்பூர் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கும் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் இடம்பெற்றது. சர்வதேச பயங்ரவாத ஒழிப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் பின்பற்ற வேண்டிய கூட்டு நடவடிக்கைகள் தொடர்பில் இச்சந்திப்பின்போது பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே.சண்முகத்தையும் சந்தித்தார். சமூக பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது. இந்து சமுத்திர பிராந்தியத்தை மோதல் அற்ற அமைதியான பிரதேசமாக மாற்றுவதற்கு இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளை அமைச்சர் சண்முகம் பாராட்டினார். இவ்விடயத்தில் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கைக்கான சிங்கப்பூர் தூதுவர் சந்திரதாசும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.

இதேவேளை சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் நாடு திரும்பினார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2019 18:33

Default