fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விசேட தேவையுடைவர்களுக்கென வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2019 12:36

விசேட தேவையுடைவர்களுக்கென வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

விசேட தேவையுடைவர்களுக்கென வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை 2 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் கொடுப்பனவு அதிகரிப்பு அமுலுப்படுத்தப்படும்.

இதற்கமைய விசேட தேவையுடைய நபர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மாதாந்த கொடுப்பனவாக ஐய்யாயிரம் ரூபாவை பெற்றுக்கொள்ள முடியுமென சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள 32 ஆயிரம் பேருக்கு இந்த கொடுப்பனவு கிடைக்கப்பெறும் இந்நிலையில் கொடுப்பனவை பெறும் எதிர்பார்ப்புடன் மேலும் 40 ஆயிரம் பேர் அதற்கென தம்மை பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய புதிதாக பதிவு செய்யப்பட்ட 40 ஆயிரம் பேருடன் மொத்தமாக 72 ஆயிரம் பேருக்கு 5 ஆயிரம் ரூபாவை மாதாந்த கொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கென அரசாங்கத்தினால் 4 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2019 12:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க