மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரச உடமையாக்க யோசனை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2019 11:31

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரச உடமையாக்க யோசனை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரச உடமையாக்குவதற்கு காணப்படும். சாதகமான தன்மைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பல்கலைக்கழக சட்டத்தில் 70 எப் சரத்தின் கீழ் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சரத்திற்கமைய பட்டமொன்றை வழங்கும் நிறுவனத்தை பொதுமக்களின் நலன்கருதி அரச உடமையாக்குவதற்கு ஏற்பாடுகள் உள்ளதை கண்டறியும் பட்சத்தில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக குறித்த நிறுவனத்தை அரச உடமையாக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2019 11:31

Default