fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பலத்த காற்றுடன் கூடிய வானிலை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2019 09:32

பலத்த காற்றுடன் கூடிய வானிலை

பலத்த காற்றுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் காற்றானது மணிக்கு 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். இதன்போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் கடற்பகுதிகளிலும் பலத்த காற்று வீசுமென்பதால் கடல் கொந்தளிப்பாக காணப்படும். இதுகுறித்து மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2019 09:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க