fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் LTTE உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக விசேட திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 16:03

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் LTTE உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக விசேட திட்டங்கள்

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக விசேட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

புனர்வாழ்வளிககப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களின் குடும்பங்களை சுயதொழிலில் ஈடுபடுத்தி, அக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது, புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தினால் இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் திருமலை மாவட்டத்தில் சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்கள் 39 பேருக்கு சுயதொழில் உபகரணங்கள் மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் வழங்கப்பட்டது.

இதேவேளை வவுனியா பகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்கள் 16 பேருக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் வைபவம் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புனர்வாழ்வு துறைக்கான இணைப்பு அதிகாரி கேர்னல் கே.பெர்னாண்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 16:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க