வளமான தேசத்தின் வாவி புரட்சியான எல்லங்கா குளக்கட்டமைப்பை புனரமைக்கும் செயற்திட்டத்தின் குருநாகல் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. மூவாயிரம் ஏக்கர் வயல் காணிகளில் அறுவடை, ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்களின் பொருளாதாரத்தை வலுவூட்டல் ஆகியவற்றை நோக்காக கொண்டு இத்திட்டத்தின் கீழ் 21 வாவிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
எல்லங்கா குளக்கட்டமைப்புடன் இணைந்த 2 ஆயிரத்து 400 கிராமிய வாவிகளை புனரமைக்கும் பாரிய நீர்ப்பாசன திட்டம் கடந்த 2018ம் ஆண்டு ஜனாதிபதியினால் அனுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் மற்றுமொரு கட்டமாகவே குருநாகல் மாவட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு குருநாகல் மேற்கு பண்டுவாஸ் நுவரவிலுள்ள கொடக்கிம்புலாகட அனைக்கட்டுக்கு அருகில் இன்று இடம்பெறவுள்ளது.