வருடமொன்றுக்கு சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்து 9 ஆயிரம் முறைப்பாடுகள்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 10:59

வருடமொன்றுக்கு சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்து 9 ஆயிரம் முறைப்பாடுகள்

வருடமொன்றுக்கு சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்து 9 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 1929 எனும் இலங்கை சிறுவர் உதவி தொலைபேசி சேவைக்கே இம்முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதில் ஆயிரத்து 500க்கும் அதிகமான முறைப்பாடுகள் சிறுவர்களின் கல்வி உரிமை மீறப்பட்டமை தொடர்பானதென அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி எச்.எம்.அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இவ்வாறான சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவிக்கிறது.

இன்று சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், அது தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இடம்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது.

‘சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிப்போம், அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்’ எனும் தொழினிப்பொருளில் இம்முறை சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு சமுதாய பொருளாதார பிரச்சினைகள் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அதனால் ஏற்படும் பாதிப்பு, பாதுகாப்பற்றத்தன்மை ஆகியவற்றை இல்லாது செய்யதல், சிறுவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாக கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன.

இதன் முதற்கட்ட நிகழ்வு கடந்த 5ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலக காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 70 சிறுவர்களுக்கு புத்தக பைகள், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 10:59

Default