fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய பொசோன் வாரம் இன்று ஆரம்பம் : மதுபானசாலைகளை மூடுமாறு கலால் திணைக்களம் அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 15:01

தேசிய பொசோன் வாரம் இன்று ஆரம்பம் : மதுபானசாலைகளை மூடுமாறு கலால் திணைக்களம் அறிவிப்பு

தேசிய பொசொன் வாரம் இன்று முதல் அமுலாகிறது. இதுதொடர்பான ஆரம்ப சமய நிகழ்வுகள் அனுராதபுரம் ஜயஸ்ரீ மகாபோதிக்கருகில் இன்று இடம்பெறவுள்ளது. அதற்கமைய அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரி மலை ஆகிய பகுதிகளை கேந்திரமாக கொண்டு அரச அனுரணையில் பொசான் உற்சவங்கள் இடம்பெறவுள்ளன.

அதற்கமைய எதிர்வரும் 18ம் திகதி வரை சகல அரச நிறுவனங்களிலும் கட்டிடங்களிலும் பௌத்த கொடியினை ஏற்றி வைக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் இதனை முன்னிட்டு கல்வியமைச்சினால் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை பொசன் வாரத்தை முன்னிட்டு அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரி மலை பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாளை முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுவோர்களை கைதுசெய்வதற்கான விசேட சுற்றிவளைப்புக்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 15:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க