ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது
Related Articles
ஜாஎல களு பாலத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வலான ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 550 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரை இன்றைய தினம் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.