fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போக்குவரத்து பிரிவு பிரதானியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 14:16

போக்குவரத்து பிரிவு பிரதானியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவு பிரதானியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் நாளையதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்தது.

வீதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அகற்றும் போது குறித்த நபர் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று மாவட்ட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 14:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo