fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தை வெளியிடும் வைபவம் ஜனாதிபதி தலைமையில்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 13:16

தேசிய டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தை வெளியிடும் வைபவம் ஜனாதிபதி தலைமையில்

தேசிய டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தை வெளியிடும் வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் தாமரை தடாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இலங்கையொன்றை கட்டியெழுப்பும் திட்டத்தின் முக்கிய திருப்புமுணையாக ஸ்ரீ லங்கா டெலிகொம் குழுமத்தை தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் கட்டியெழுப்பும் தேசிய டிஜிட்டல்மயமாக்கல் திட்டமே இவ்வாறு வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இவ்வைபவம் இடம்பெற்றதுடன் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, அஜித் பீ பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் மூலம் ஊழியர்கள், பாவனையாளர்கள் மற்றும் நாட்டு மக்கள் ஆகிய முத்தரப்பினதும் திறமைகளை முன்னெடுப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும். முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் பேச்சு மற்றும் நூல் வெளியீட்டுக்காக சங்கைக்குரிய மெதகொம அபயதிஸ்ஸ தேரருக்கு விருதொன்றும் வழங்கப்பட்டது. அத்துடன் சிறுநீரக நோய் ஒழிப்பு நிதியத்திற்காக வழங்கப்பட்ட நன்கொடை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க