சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 12:05

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு தொகை பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைவாக பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் சுமார் ஏழரை இலட்சம் ரூபா பணமும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை, கல்முனை, ஆராயம்பதி, கல்லாறு, சாய்ந்தமருது, மட்டக்களப்பு புதூர் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கNளு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சுற்றி வளைப்பின் பேது ஒருவர் தப்பியோடியதுடன் அவரது கையடக்க தொலைபேசி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யபபட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 12:05

Default