fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐபோ கிலைசீனியா எனப்படும் நோயினால் தீஹார் மாநிலத்தில் 48 மணித்தியாலத்திற்குள் 36 சிறுவர்கள் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 11:43

ஐபோ கிலைசீனியா எனப்படும் நோயினால் தீஹார் மாநிலத்தில் 48 மணித்தியாலத்திற்குள் 36 சிறுவர்கள் பலி

இந்தியாவின் தீஹார் மாநிலத்தில் 48 மணித்தியாலததிற்குள் 36சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஐபோ கிலைசீனியா எனப்படும் இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்ததனால் இவ்வாறு சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்நோயினால் பாதிக்கப்பட்ட மேலும் 133 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீஹார் மாநிலத்தின் பின்தங்கிய பகுதியை சேர்ந்த 15 வயதிற்கும் குறைவான சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக இந்திய சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர். மயக்கம், வயிற்றோட்டம் மற்றும் கோமா நிலைக்கு செல்லுதல் என்பன இந்நோயின் அறிகுறிகளாகும்.

ஒரே நேரத்தில் இவ்வளவு சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் இதுவரை கண்டறியபபடவில்லை. நோய்க்கான காரணங்களை கண்டறிவதற்கான ஆய்வுகள் இடம்பெறுகின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 11:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க