fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீரற்ற வானிலை மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 10:16

சீரற்ற வானிலை மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் காற்றானது மணிக்கு 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். இதன்போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் நாட்டில் மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் கடற்பகுதிகளிலும் பலத்த காற்று வீசுமென்பதால் கடல் கொந்தளிப்பாக காணப்படும். இதுகுறித்து மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 10:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க