புதிய விமான படை தளபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்
Related Articles
புதிய விமான படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
புதிய விமான படை தளபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று நண்பகல் இடம்பெற்றது. விமான படை தளபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கினார். பிரதமர் பாதுகாப்பு இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் சுமித் பாலசூரியவும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.