பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வட மத்திய பாடசாலைகளுக்கு விடுமுறை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2019 16:33

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வட மத்திய பாடசாலைகளுக்கு விடுமுறை

அநுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரி மலை பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி மற்றும் 13 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பொசொன் நோன்மதி வைபவத்தை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி இடங்களில் இருந்து அநுராதப்புரத்திற்கு வரும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினருக்கு தங்குமிட வசதிகள் வழங்குவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக அநுராதபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மூடப்படவுள்ளன. இந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2019 16:33

Default